லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

லண்டனில் இருந்து பேசுவது போல் நடத்து பரிசு பொருட்கள் வந்ததாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-07-28 19:00 GMT


லண்டனில் இருந்து பரிசு பொருட்கள் வந்திருப்பதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிசு பொருட்கள்

காரைக்குடியை அடுத்த கோட்டையூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 47). இவர் சிவகங்கையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பணிபுரிகிறார். கடந்த மார்ச் மாதம் இவருடைய செல்போனுக்கு லண்டனில் இருந்து ஒருவர் பேசுவதாக கூறியுள்ளார். அடிக்கடி ெசல்போனில் பேசியதில் இருவரும் நண்பர்களாகினர். மேலும் லண்டனில் உள்ள நபர் முத்துக்குமாருக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து பேசிய ஒருவர் முத்துக்குமாரிடம் உங்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வந்துள்ளது. அதனை பெறுவதற்கு சுங்க வரி கட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரூ.7½ லட்சம் மோசடி

இதை நம்பிய முத்துக்குமார் டெல்லியில் இருந்து பேசியவர் கூறிய வங்கி கணக்கில் இரண்டு தவணைகளில் ரூ.7 லட்சத்து 55 ஆயிரம் செலுத்தி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் முத்துக்குமாரின் தொடர்பை துண்டித்து விட்டனர்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முத்துக்குமார் இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் மனு அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம், இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்