கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

நெகமம் அருகே கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-27 18:45 GMT

நெகமம்

நெகமம் அருகே கிராவல் மண் ஏற்றிச்சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நான்கு வழிச்சாலை பணி

பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக நெகமம் அருகே வடசித்தூர் சாைல வழியாக லாரிகளில் கிராவல் மண் கொண்டு செல்லப்படுகிறது.

இதற்கிடையில் கப்பளாங்கரையில் செல்லும்போது, அந்த லாரிகள் வேகத்தடைகளை மெதுவாக செல்லாமல் விரைவாக செல்வதாக கூறப்படுகிறது. அப்போது லாரியில் இருந்து மண் கீழே கொட்டு விடுவதாக தெரிகிறது. இதன் காரணமாக விபத்துகள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று இரவில் கப்பளாங்கரை வழியாக சென்ற லாரிகளை பொதுமக்கள் திடீரென சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் கூறுகையில், தினமும் இந்த சாலை வழியாக ஏராளமான லாரிகள் இயக்கப்படுகின்றன. டிரைவர்கள் வேகத்தடையை மதிக்காமல் வேகமாக இயக்கி செல்வதால், மண் கீழே கொட்டி விபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வரை லாரிகளை விடுவிக்க மாட்டோம் என்றனர்.

இதையடுத்து சாலையில் கொட்டி கிடந்த மண்ணை சம்பந்தப்பட்ட லாரி டிரைவர்கள் உள்பட சிலர் அகற்றினர். மேலும் தினமும் ஆட்களை வைத்து சுத்தம் செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று லாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்