அன்னவாசல் ஒன்றியம், சத்தியமங்கலம் பிரிவு சாலை முதல் இரும்பாளி வரையிலான சுமார் 6 கி.மீ. தூரம் சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக நிலையில் இருந்து வந்தது. இதனை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.