திருமணமாகாத ஏக்கத்தில் சிவில் இன்ஜினியர் தற்கொலை..!
திருச்சி அருகே திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த சொரத்தூர் பழனி நகரைச் சேர்ந்த குருசாமி என்பவரது மகன் கல்யாணசுந்தரம் (வயது 33). இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் திருமணம் ஆகாத நிலையில் கடந்த இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர்.
இதையடுத்து இன்று மதியம் திருமணமாகாத எக்கத்தில் கல்யாணசுந்தரம் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது உறவினருக்கு செல்போன் மூலம் தான் பூச்சி மருந்து குடித்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அனுமதித்த சில மணிநேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி கல்யாணசுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.