நகரத்தார்கள் கூண்டு மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பாடு

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து நகரத்தார்கள் கூண்டு மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டனர்

Update: 2023-04-29 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், தன்வந்திரி, செவ்வாய் (அங்காரகன்),விநாயகர், செல்லமுத்து குமாரசாமி ஆகியோர் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நகரத்தார்கள் சித்திரை முதல் செவ்வாய் அன்று ஊரிலிருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு இரண்டாவது செவ்வாய் அன்று கோவிலை வந்தடைந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை இரண்டாம் செவ்வாயன்று சாமி தரிசனம் செய்த பின்னர் அருகில் உள்ள பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட தலங்களுக்கு சென்று நேற்று மீண்டும் நகரத்தார்கள் தாங்கள் கொண்டு வந்த கூண்டு மாட்டு வண்டியில் தங்களுடைய ஊருக்கு புறப்பட்டு சென்றனர். சாலையில் கூண்டு மாட்டு வண்டிகள் அணிவகுத்து சென்றதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்