நகர் மன்ற கூட்டம்

சீர்காழி நகர் மன்ற கூட்டம் நடந்தது

Update: 2023-01-23 18:45 GMT

 சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். ஆணையர் வாசுதேவன் துணைத் தலைவர் சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் மன்ற பொருட்களை வாசித்தார் இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து பேசினர். இதில் நகராட்சி மேலாளர் காதர்கான், அலுவலர் செந்தில் ராம்குமார், வருவாய் ஆய்வாளர் சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்