ஊதிய உயர்வு வழங்கக்கோரி நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு வழங்கக்கோரி நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

Update: 2023-09-08 20:57 GMT

சேலம், நாமக்கல், ஈரோடு நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட உதவி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன மாநில உதவி தலைவர் ராஜேந்திரன் உள்பட சேலம், நாமக்கல், ஈரோடு நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும். மாநில வங்கி, மத்திய வங்கிகளை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்க வேண்டும். மத்திய மற்றும் நகர வங்கி ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம், பஞ்சப்படியில் 20 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்