சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பா.ஜனதா எம்.பி. பிரிஜ்பூசன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தியும், டெல்லி ஜந்தர் மந்தரில் விளையாட்டு வீராங்கைனகளுக்கு ஆதரவு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாவட்ட தலைவர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார். முத்துமாரி, முருகன், சரவணபெருமாள், ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மோகன், ஜனநாயக வாலிபர் சங்கம் அருள் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் செல்லத்துரை, செந்தில், துரை நாராயணன், முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.