சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சாலை சட்டத்தை திருத்தி, 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்திய தமிழக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பீர்முகமது ஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் மாநில துணைத்தலைவர் செண்பகம், மாநில குழு உறுப்பினர் மோகன், மாவட்ட பொருளாளர் ராஜன், நிர்வாகிகள் சரவண பெருமாள், கந்தசாமி சக்திவேல், செல்லத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.