சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கூட்டம்
விருதுநகரில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க வாயிற் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய சங்க தலைவர் சுந்தரராஜன் தலைமையில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை விளக்கி கூறியதுடன் உடனடியாக கோரிக்கையின் மீது பேச்சுவார்த்தை தொடங்க வலியுறுத்தப்பட்டது. இதில் தொழிற்சங்க உதவி தலைவர் வேலுச்சாமி, ஓய்வு பெற்றோர் சங்க செயலாளர் போஸ் ஆகியோர் பேசினர். சி.ஐ.டி.யு. சங்க பொதுச்செயலாளர் வெள்ளத்துரை நிறைவுரை ஆற்றினார். முடிவில் சங்க பொருளாளர் கார்மேகம் நன்றி கூறினார்.