கன்னியாகுமரியில் சி.ஐ.டி.யு. மாநில மாநாடு தொடங்கியது

கன்னியாகுமரியில் சி.ஐ.டி.யு. மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 6-ந் தேதி வரை நடக்கிறது.

Update: 2022-11-03 18:27 GMT

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் சி.ஐ.டி.யு. மாநில மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 6-ந் தேதி வரை நடக்கிறது.

மாநில மாநாடு

இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யு.) தமிழ்நாடு மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்க வரவேற்பு நிகழ்ச்சி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகே நடந்தது. இதையொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நினைவுச் சுடர் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் மாநாடு வரவேற்பு குழுத் தலைவர் ஜி.ஜெலஸ்டின் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எம்.ஐடா ஹெலன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் பெருமாள், சந்திரகலா, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், நவீன தாராளமாயமாக்கல் கொள்கையால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை ஆட்சியாளர்கள் சிந்திப்பது இல்லை என்றார்.

முன்னாள் எம்.பி.

நிகழ்ச்சியில் சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், திரைப்பட நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.சவுந்தரராஜன், எஸ்.நூர்முகம்மது, ஆர்.லீமாரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் தங்கமோகன் மற்றும் நிர்வாகிகள் அகமது உசைன், தாமஸ் பிராங்கோ, நாகராஜன், சிங்காரன், பி.இந்திரா, ஜான் சவுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் எம்.சித்ரா நன்றி கூறினார். இந்த மாநாடு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது. நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்