கள்ளக்குறிச்சியில்சி.ஐ.டி.யு. வாயிற் கூட்டம்
கள்ளக்குறிச்சியில் சி.ஐ.டி.யு. வாயிற் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. சார்பில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க கோரியும்,.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் அனைத்து பண பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைவருக்கும் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு தொழிற்சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மண்டல துணை செயலாளர் தெய்வீகன், சி.ஐ.டி.யு. விழுப்புரம் மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணிமனை பொறுப்பாளர்கள், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.