சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய தொழிற்சங்க மையம் சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார்.
செயலாளர் பரசுராமன், துணைத்தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் ஒப்பந்த முறையை ஒழிக்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களில் பங்குகள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
முறைசாரா தொழிலாளர்களின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் அனைத்து பணபயன்களும் நிபந்தனையின்றி உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.