தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் திருப்பூர் மண்டல அலுவலகம் முன் நேற்று நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை தலைவா் கதிரேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், வரவு,செலவு இடையிலான பற்றாக்குறையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வழங்கிட வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை 3 வருடங்கள் நடைமுறைப்படுத்திட வேண்டும், போக்குவரத்து துறையை பாதுகாத்திட தொழிலாளர்களை நேரடி நியமனம் மூலம் பணிக்கு எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சேகர், மாநில துணை செயலாளர் செல்வராஜ், மண்டல செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.