குடியிருப்பு பகுதிகளில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதி
அருப்புக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் குப்பையை எாிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் குப்பையை எாிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
புகை மண்டலம்
அருப்புக்கோட்டை புளியம்பட்டி-விருதுநகர் சாலையில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் பின்புறம் ஓடை உள்ளது. இ்ந்த ஓடையில் அப்பகுதியில் சேரும் குப்பைகளை கொட்டுகின்றனா். இந்த குப்பைகளை ஒருசிலர் தீயிட்டு எரித்து செல்கின்றனர்.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிப்பதுடன், தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது. கடும் புகையினால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகள் உண்டாகும் அபாயம் நிலை உள்ளது.
தொற்றுநோய்
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
புளியம்பட்டி உச்சினிமாகாளியம்மன் கோவில் பின்புறம் ஓடை பகுதியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் பொதுமக்களிடம் சேகரிக்கும் குப்பைகளை மலை போல் கொட்டுகின்றனர்.
மேலும் அவ்வாறு கொட்டும் குப்பைகளை தீயிட்டு எரிக்கின்றனர். இப்பகுதியை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் தான் பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. குப்பைகளை எரிப்பதால் கிளம்பும் புகை பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் சுவாச பிரச்சினைகளை உண்டாக்குகிறது. குடியிருப்பு பகுதியை சுற்றி குப்பைகள் கொட்டப்படுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இதுபோன்று குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிப்பதை உடனடியாக நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவா்கள் கூறினர்.