ஆழ்துளை கிணற்றில் மழைநீர் கலப்பதை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பாணாவரத்தில் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் கலப்பதை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம்
பாணாவரத்தில் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் கலப்பதை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழைநீர் கலப்பு
ராணிப்பேட்ைட மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் பாணாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
இந்த ஆழ்துளை கிணற்றில் மழைநீர் கலந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறினர்.
அதற்கு ஊராட்சி தலைவர் அர்ஜுனன் குடிநீரில் மழைநீர் கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இன்று பாணாவரம்- சோளிங்கர் செல்லும் சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.