தக்கலை அருகே ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் 'திடீர்' சாலை மறியல்

தக்கலை அருகே ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-27 18:18 GMT

தக்கலை, 

தக்கலை அருகே ரேஷன் கடை திறக்காததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

ரேஷன் கடை

தக்கலை அருகே உள்ள சாரோட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள ரேஷன்கடை உள்ளது. இங்கு ஏராளமான குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடை கடந்த 22-ந் தேதி சனிக்கிழமை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. அதன்பின்பு ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி விடுமுறை முடிந்து 25-ந் தேதி கடை திறந்திருக்க வேண்டும். ஆனால் அன்று கடை திறக்கப்படவில்லை. நேற்று முன்தினம் பணிக்கு வந்த ஊழியர் கடையை திறந்த சிறிது நேரத்தில் உடல் நலம் சரியில்லை எனக்கூறி கடையை பூட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4 நாட்களாக ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்தநிலையில் நேற்று காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ெபாதுமக்கள் பொருட்கள் வாங்க கடை முன் குவிந்தனர். ஆனால், காலை 11 மணி வரை கடை திறக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு மேக்காமண்டபம் செல்லும் சாலையில் அமர்ந்தும், தங்கள் மோட்டார் ைசக்கிள்களை நிறுத்தியும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாற்று ஊழியர் அங்கு பணிக்கு வந்து ரேஷன் கடையை திறந்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு ரேஷன் பொருட்களை வாங்க சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்