மரங்கள் வெட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் மீண்டும் மறியல்

பனப்பாக்கத்தில் மரங்கள் வெட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் மீண்டும் மறியல் செய்தனர்.

Update: 2023-05-23 18:25 GMT

பனப்பாக்கம் பேரூராட்சி, தென்மாம்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 3 வேப்பமரங்களை வெட்ட பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஏலம் எடுத்தவர்கள் மரத்தை வெட்ட சென்றபோது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம்- பனப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது மரம் வெட்டுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக வருவாய்த் துறையினர் கூறியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை ஏலம் எடுத்தவர்கள் திடீரென்று மரங்களை வெட்டியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெமிலி தாசில்தார் பாலசந்தர், பனப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் குமார், நெமிலி இன்ஸ்பெக்டர் இலட்சுமிபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சமரசம் ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்