நாகை நகராட்சியை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

Update: 2023-05-27 18:45 GMT

நாகை நகராட்சியை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூய்மை பணி

நாகூரில், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது:-

நாகை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் வாரம் தோறும் ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்து வருகிறது. அதன்படி நாகை நகராட்சியை சுத்தப்படுத்த நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் நாகூர் பகுதியில் 1 முதல் 10 வார்டுகள் வரை ஒட்டுமொத்த தூய்மை பணி நடந்தது. புகழ்பெற்ற நாகூர் சில்லடி கடற்கரையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டு, தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

ஒத்துழைக்க வேண்டும்

வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை முறையாக கொடுக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.சாலையில் குப்பைகளை கொட்டாமல், குப்பை தொட்டிகளில் போட வேண்டும். நாகை நகராட்சியை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) விஜய்கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்