பந்தலூர் அருகே பழுதான சாலையை சீரமைத்த பொதுமக்கள்

பந்தலூர் அருகே பழுதான சாலையை சீரமைத்த பொதுமக்கள்

Update: 2023-06-11 19:00 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே தேவாலாவிலிருந்து கரியசோலைசெல்லும் சாலையில் உள்ளது வாழவயல் குடோன் அருகே ஏராளமான பொதுமக்கள்குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள சாலை குண்டும் குழியாகவும் காணப்பட்டது. இதனால் அவசர தேவைகளுக்கு தனியார் வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாத நிலையில் காணப்பட்டது. இதன்காரணமாக நோயாளிகளையும் கர்ப்ிணிகளையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல குடோன் வரை சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அதனால் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சாலையை சீரமைக்கஅனைத்து வீடுகளிலும் பணம் வசூல்செய்தனர். இதையடுத்து பழுதான அந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்