3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
நாச்சியார்ேகாவில் அருகே 3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் மாத்தூர் ஊராட்சி தோப்பு தெருவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. அப்போது மின்தடை ஏற்பட்டது. இதை தொடர்ந்து இந்த மின் பழுதை சரி செய்து மின்வினியோகம் வழங்கவில்லை. இதனால் தோப்பு தெரு மக்கள் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வந்தனர்.3 நாட்களாக மின்தடை ஏற்பட்டதை கண்டித்து தோப்புத் தெரு மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாத்தூர் மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாச்சியார் கோவில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.