ஆரணியில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஆரணி பேரூராட்சி அலுவலகத்தை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-10-16 09:03 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.

ஆரணி பேரூராட்சியில் உள்ள வள்ளுவர்மேடு பகுதியில் சீரான குடிநீர் வழங்கவில்லை, தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை, என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 13-வது வார்டு கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும், வள்ளுவர் மேடு பகுதிக்கு 10 நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

இதன் பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பரபரப்பும் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்