குடியிருப்பு பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

குடியிருப்பு பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-20 12:02 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதியார் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:-

தாங்கள் வசித்து வரும் அரண்வாயல் ஊராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்ட செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் வயதானவர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு உருவாக்கும் வகையில் குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த செல்போன் கோபுரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

பின்னர் இவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்