வட்டார சுகாதார பேரவை கூட்டம்

வட்டார சுகாதார பேரவை கூட்டம்

Update: 2022-09-16 12:19 GMT

குடிமங்கலம்

குடிமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம் பெதப்பம்பட்டியில் உள்ள ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சுகாதார பேரவை கூட்டத்திற்கு குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். குடிமங்கலம் ஒன்றிய கவுன்சிலர் முரளி சிறப்புரையாற்றினார்.

குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளர் சிவகுருநாதன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சிகள் சாதிக்பாட்சா மாவட்ட திட்ட அலுவலர் மோகன்ராஜ் மாவட்ட பயிற்சி குழு மருத்துவ அலுவலர் ஸ்ரீநிவாஸ், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காசிம்முஸ்தபா வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன். சுகாதார பேரவை நிகழ்ச்சியில் திட்ட விளக்க உரையினை குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ஒளித்திரை மூலம் விளக்கம் அளித்தார்.

குடிமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஒளித்திரை வாயிலாக விளக்கி எடுத்துரைத்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மேம்பாட்டிற்காகவும், சேவைகளை மேம்படுத்த தேவையானவை செய்து கொடுப்பதற்கு ஒத்துழைப்பு தருவதற்கு உறுதி அளித்தனர்.பேரவை நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் யோகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்