ஊட்டி மலை ரெயிலில் சினிமா படப்பிடிப்பு

ஊட்டி மலை ரெயிலில் சினிமா படப்பிடிப்பு நடந்தது.

Update: 2022-06-12 14:34 GMT

ஊட்டி, 

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், இயற்கை காட்சிகள், மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டம் போன்றவை சினிமா படப்பிடிப்புக்காக எடுக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதேபோல் ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ரெயில் நிலையங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஊட்டி லவ்டேல் ரெயில் நிலையத்தில் இந்தி சினிமா படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்புக்காக நீலகிரி மாவட்டத்தில் 1899-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட நீராவி என்ஜின் கொண்டு வரப்பட்டது. பழமையான நீராவி என்ஜினுடன் மலை ரெயில் இணைக்கப்பட்டது. நேற்று முன்தினம் ரெயில் நிலையம் வந்த சுற்றுலா பயணிகள் படப்பிடிப்பையும் கண்டு ரசித்தனர். குகைகளை கடந்து மலை ரெயில் செல்வது மற்றும் அதில் நடிகர்கள் பேசுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது. குன்னூரில் இருந்து நீராவி மலை ரெயில் என்ஜின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் லவ்டேல் சந்திப்பு என்ற பெயர் ரிவர்டேல் சந்திப்பு என சினிமாவுக்காக மாற்றப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்