தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

Update: 2022-12-25 20:06 GMT


தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் விழா

விருதுநகர் புனித இன்னாசியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் பங்கு அல்போன் செபஸ்தியார் அடிகளார், பங்குத்தந்தை அருள்ராயன் அடிகளார், துணை பங்கு தந்தை சகாய ஜான்பிரிட்டோ அடிகளார் தலைமையிலும், விருதுநகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணிசாமி அடிகளார் தலைமையிலும், விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர் அடிகளார், விருதுநகர் எஸ்.எப்.எஸ். பள்ளி முதல்வர் ஆரோக்கிய அடிகளார், துணை பங்குத்தந்தை மார்ட்டின் குமார் அடிகளார் தலைமையிலும் கிறிஸ்துமஸ் திருப்பலியும், மறையுைரயும் நடந்தது. விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட இளைஞர் பணி குழு செயலாளர் பன்னீர் ராஜா அடிகளார், பங்குத்தந்தை பீட்டர்ராய் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் புனித இயேசுவின் திரு கிருபை ஆலயத்தில் பங்குத்தந்தை போதகர் மிக்கேல்ராஜ் அடிகளார் தலைமையிலும், சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ் அடிகளார் தலைமையிலும் திருப்பலி நடைபெற்றது.

காரியாபட்டி

அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ் எடிசன் அடிகளார் தலைமையிலும், காரியாபட்டி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் பாப்பு ராஜ் அடிகளார் தலைமையிலும், சிவகாசி புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குச்தந்தை ஜான் மார்டின் அடிகளார் தலைமையிலும், திருத்தங்கல் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை பெனடிக்ட் அம்புரோஸ் அடிகளார் தலைமையிலும், மீனம்பட்டி புனித அன்னை தெரசா ஆலயத்தில் பங்குத்தந்தை பால்ராஜ் அடிகளார் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

திருப்பலியின் முடிவில் குழந்தை இயேசுவை அனைவரும் முத்தமிட்டு அருளாசி பெற்று சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா சிவப்பு உடை அணிந்து தலையில் பெரிய தொப்பி அணிந்து பரிசு பொருட்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார். அத்துடன் அனைவரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

ஆலங்குளம்

ஆலங்குளம் சிமெண்டு ஆலை காலனியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், தொம்ப குளம் கிறிஸ்தவ ஆலயம், டி.மேட்டூர் கிறிஸ்தவ ஆலயம், அழகாபுரி கிறிஸ்தவ ஆலயத்திலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

சாத்தூரில் உள்ள ஆர்.சி. தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி வண்ண விளக்குகளால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்