வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள வரத விகாஸ் பப்ளிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எம்.என்.ராஜா தலைமை தாங்கி, ஏசு கிறிஸ்துவின் பெருமையையும், கல்வி மற்றும் சுகாதாரத்தின் பங்களிப்பையும் நினைவு கூறி பேசினார். அரியலூர் புனித லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை டோமினிக் சாவியோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏசு கிறிஸ்து பிறப்பின் புனித தன்மையும், அவர் பிறந்த நோக்கத்தினையும், ஏசு பெருமான் இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானவர் என்றும் கூறினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் நாடகமும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவ-மாணவிகள், ஆசிரியர், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவி ஆராதனா வரவேற்புரையாற்றினார். முடிவில் பள்ளியில் முதல்வர் அருள் பிரபாகர் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி, கல்லூரியின் நிர்வாக அலுவலர் ஜி.லல்லி செய்து இருந்தார்.