சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளியில்கிறிஸ்துமஸ் விழா

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளியில்கிறிஸ்துமஸ் விழா நடந்தது.

Update: 2022-12-25 18:45 GMT

ஆறுமுகநேரி:

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் அனுராதா தலைமை தாங்கினார். பள்ளி மாணவ மாணவிகளின் மனநல ஆலோசகர் ஆர். கணேஷ் பள்ளி நிர்வாகி வி. மதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன் பாலாசீர் வரவேற்றார்.

விழாவில் சிறுவர், சிறுமியர் இயேசு அவதரித்தை விளக்கும் நிலை காட்சியினை நடத்திக் காட்டினார்.

மேலும் மாணவ, மாணவிகள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஜான் சாமுவேல், எபநேசர், ஆறுமுகசாமி ஆகியோர் கிறிஸ்துமஸ் பாடல் பாடினர்.

ஆசிரியர் ஜேம்ஸ் இக்னேஷியஸ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்