தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடந்தது.

Update: 2022-11-28 19:00 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் தென்னிந்திய திருச்சபை, பண்டிகைக்கு முந்தைய 4 ஞாயிற்றுக்கிழமைகளை கிறிஸ்துவின் வருகை என அனுசரிக்கும்.இதனை குறிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூர், தூய தோமா தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை குருசேகர தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தலைமையில் நடைபெற்றது.பாடகர் குழு தலைவர் எட்வின் கனகராஜ் தலைமையில், பாடகர் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களை இசையுடன் பாடினர். பின்னர் குருசேகர தலைவர் மற்றும் சபைகுரு பால்தினகரன் தேவசெய்தியளித்து ஆசி வழங்கினார்.நிகழ்ச்சியில் திருச்சபை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்