கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

தேசிய கொடி ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலம் நடந்தது

Update: 2022-09-03 21:43 GMT

களக்காடு:

களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ஸ்தோத்திர பண்டிகை தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவர்களின் ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை சேகர குரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார். சபை ஊழியர் சுஜின் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு தேசிய கொடி ஏந்தி சென்றனர். ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை அடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. ஸ்தோத்திர பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்