கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் இருந்து கிறிஸ்தவ பெண்களும், ஆண்களும் சிலுவையை சுமந்தபடியும், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிலுவையில் ஏசு கிறிஸ்துவின் சொரூபமும் வைக்கப்பட்டு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் மேல ராஜ வீதி வழியாக முக்கிய வீதிகளை கடந்து திரு இருதய ஆண்டவர் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.