உடுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

உடுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Update: 2022-12-25 11:20 GMT

உடுமலை

உடுமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

உடுமலை தளி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல் பவனி, திருமறை அறிவுப்போட்டி, கிறிஸ்துமஸ் குடும்ப கீத

ஆராதனை, கிராமத்தில் கிறிஸ்துமஸ் விழா, ஞாயிறு பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், ஆண்கள், பெண்கள் ஐக்கிய சங்கம் மற்றும் ஜெபக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள், 70வயது முதியவர்களை கவுரவப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று காலைசிறப்பு ஆராதனை நடந்தது. கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திருச்சபை திருச்சி தஞ்சை திருமண்டலம் உடுமலை நகர சேகரத்தலைவர் எஸ்.சுதர்சன், சி.எஸ்.ஐ. இம்மானுவேல் ஆலய ஆயர் எஸ்.மேரி செல்வராணி, உதவி ஆயர் கே.எல்.லுத்தர், சேகர செயலாளர் டி.பால் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஏ.ஜெயக்குமார் மற்றும் ஆலய சபை மக்கள் செய்திருந்தனர். உடுமலையை அடுத்த பள்ளபாளையத்தில் உள்ள தூய பவுல் ஆலயம்மற்றும்உடுமலை பழனி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கிறிஸ்துநாதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.

அற்புத அன்னை ஆலயம்

உடுமலை தளிசாலையில் உள்ள அருள்நிறை அற்புத அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.உடுமலை வி.வி.லே-அவுட் பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோன்று உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு ஆராதனை, சிறப்பு திருப்பலி நடந்தன. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவையொட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் மின்னொலியில் ஜொலிக்கின்றன.


Tags:    

மேலும் செய்திகள்