சுற்றுலா மாளிகை அமைக்க இடம் தேர்வு

தியாகதுருகம் அருகே சுற்றுலா மாளிகை அமைக்க இடம் தேர்வு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Update: 2022-12-04 18:45 GMT

தியாகதுருகம்

முதல்-அமைச்சர் உத்தரவுபடி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ரூ.7 கோடியே 5 லட்சம் மதிப்பில் சுற்றுலா மாளிகைகள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து தியாகதுருகம் அருகே பிரதிவிமங்கலம் பகுதியில் சுற்றுலா மாளிகை அமைப்பதற்கான இடத்தை பொதுப்பணி மற்றும் நெடுங்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாத், கோட்டாட்சியர் பவித்ரா, பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தட்சிணாமூர்த்தி மற்றும் உதவிப் பொறியாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் நெடுஞ்செழியன், கே.கே.அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் எ.வேலுவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு, பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், இளைஞர் அணி நிர்வாகி வி.எஸ்.மணி உள்ளிட்ட அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்