சொக்கன்குடியிருப்பில்பனைபொருள் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி

சொக்கன்குடியிருப்பில் பனைபொருள் உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-03-15 18:45 GMT

தட்டார்மடம்:

மத்திய பனைவெல்லம் மற்றும் பனைப் பொருள் நிறுவனம், மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சொக்கன் குடியிருப்பு அருகே உள்ள அதிசய மணல் மாதா ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

பயிற்சி நிறைவு விழாவிற்கு நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி தலைமை தாங்கினார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் பானுமதி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய பனைவெல்லம் மற்றும் பனைப்பொருள் நிறுவன உதவி இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அனைவருக்கும் கையேடு மற்றும் உபகரணங்களை வழங்கி பேசினார்.

இப் பயிற்சியில் பதநீர் மற்றும் கருப்பட்டியில் அல்வா, பாதுஷா, கடலை மிட்டாய், லட்டு, அதிரசம், கடலை உருண்டை, பொரி உருண்டை, மாவு உருண்டை உட்பட பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் செய்ய கற்றுக் கொடுக்கப்பட்டது. இப்பயிற்சியில் மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழுவை சார்ந்த 160 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். இதில் மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருள் நிறுவன அலுவலர் ஆறுமுகம், மதர் பனைப் பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் சக்தி கனி, சிவசக்தி, ஆலிஸ் மேரி, உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதர் பனைப் பொருட்கள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகி ஜெப செல்வி வரவேற்று பேசினார். நிர்வாகி தமிழரசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்