இதுவரை இல்லாத அளவுக்கு சித்திரை திருவிழா இந்தாண்டு மிகச்சிறப்பாக நடக்கும்- அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சித்திரை திருவிழா இந்தாண்டு மிகச்சிறப்பாக நடக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2023-04-26 20:23 GMT


வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சித்திரை திருவிழா இந்தாண்டு மிகச்சிறப்பாக நடக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

12 ஆயிரம் பேர்

மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். அதில் இந்து சமயநலத்துறை ஆணையர் முரளிதரன், வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ., மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித்சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைைக ஆற்றில் இறங்கும் வைபவம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இந்தாண்டு திருக்கல்யாணத்தில் 12 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கூடுதல் கவனம்

இந்த சித்திரை திருவிழாவில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்கள் எளிதாக வழிபாடு செய்ய போக்குவரத்து நெரிசல் இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வைகை ஆற்றில் போதுமான அளவு தண்ணீர் திறந்து விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த கால தவறுகள் நடைபெறாத வண்ணம் பல்வேறு சீர்திருந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சித்திரை திருவிழா இந்தாண்டு மிகச்சிறப்பாக நடக்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வைகை ஆற்றை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்