அகத்தீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா

அகத்தீஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நடைபெற்றது.

Update: 2023-05-04 19:01 GMT

கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் அகத்தீஸ்வரர் உடனுறை பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான இறுதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் காவடி, பால்குடம் எடுப்பு நிகழ்ச்சி நடந்தது. மழையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு வளர்க்கப்பட்டிருத்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்