நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு

நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு நடந்தது.

Update: 2023-05-05 18:52 GMT

நெமிலி

நெமிலி ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள ஊஞ்சல் பொன்னியம்மன் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமி வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களாலும், பழங்களாலும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்