சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2023-04-25 18:45 GMT

சங்கரன்கோவில்:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஓவ்வொரு ஆண்டும் சித்திரை பிரமோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது. காலை 5.47 மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை சரவணன் பட்டர் தலைமையிலான பட்டர்கள் செய்தனர்.

விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், தொழில்அதிபர் பி.ஜி.பி.ராமநாதன், கோமதி அம்பாள் மாதர் சங்க தலைவர் பட்டமுத்து உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் நடக்கிறது. இதில் சுவாமி-அம்பாள் இரண்டு தேர்களும் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்