சின்னவாய்க்கால் கரை சீரமைப்பு

கம்பத்தில் சின்னவாய்க்கால் கரையை பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர்.

Update: 2023-02-02 18:45 GMT

கம்பம், சாமாண்டிபுரத்தில் சின்னவாய்க்கால் கரை வழியாக குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு இடுபொருட்கள் கொண்டு சென்று வருகின்றனர். இந்த கரையில் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகு பகுதியில் உள்ள கரையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தால் விபத்து ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து சின்னவாய்க்கால் கரையை பொதுப்பணித்துறையினர் தற்காலிகமாக சீரமைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்