கஞ்சா இல்லாத கிராமம் சின்னசோரகைபோலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் அறிவிப்பு
கஞ்சா இல்லாத கிராமமாக சின்னசோரகையை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் அறிவித்தார.
மேச்சேரி,
நங்கவள்ளி அருகே சின்ன சோரகை கிராமத்தை கஞ்சா இல்லாத கிராமமாக அறிவிக்கும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், கஞ்சா இல்லாத கிராமமாக சின்ன சோரகையை அறிவித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சின்ன சோரகை ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி வரவேற்றார். ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, ஜலகண்டாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், நங்கவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் மாதேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் பேசும்போது, பொதுமக்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றியும், அதனால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றியும் விளக்கி கூறினார். மேலும் கிராமங்களில் ஏற்படும் சிறு,சிறு திருட்டுகளை எப்படி தவிர்ப்பது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசினார்.