சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியதை அடுத்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2022-11-10 18:45 GMT

குமரி கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியதை அடுத்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி விசைப்படகு மீனவர்கள் தினமும் அதிகாலையில் மீன்பிடிக்க சென்று விட்டு இரவு கரை திரும்புவது வழக்கம். மேலும், துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

சூறைக்காற்று வீசும்

இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், குமரி கடல் பகுதியில் நேற்று மற்றும் இன்று(வெள்ளிக்கிழமை), நாளை(சனிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் மணிக்கு 45-55 கி.மீ வரை சூறைக்காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இதனைத்தொடர்ந்து நேற்று சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்