சிறுமியிடம் சில்மிஷம்; தொழிலாளி கைது
இரணியல் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
குளச்சல்:
இரணியல் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
10 வயது சிறுமி
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 31), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இரணியல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர் தனது தாயாருடன் பாட்டி வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகை கொண்டாட சென்றிருந்தார்.
தொழிலாளி கைது
இந்தநிலையில் நேற்று காலையில் சிறுமியின் உறவினர் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது சிறுமி பாட்டி வீட்டின் வெளியே ஒரு சந்து பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஸ் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டதாக தெரிகிறது. உடனே சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடிச் சென்று நடந்ததை வீட்டில் உள்ளவர்களிடம் கூறினாள் அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஜெகதீஸ் நின்று கொண்டிருந்தார். உடனே அவரை மடக்கிப் பிடித்து குளச்சல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் ஜெகதீஸ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.