சிறுவர்களிடம் சில்மிஷம்:விடுதி வார்டன் போக்சோவில் கைது

தூத்துக்குடியில் சிறுவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட விடுதி வார்டன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-02-06 18:45 GMT

தூத்துக்குடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மகேஷ்குமார் (வயது 25). இவர் தனியார் பள்ளிக்கூட விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த விடுதியில் தங்கி படித்து வந்த 14 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்தாராம். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, விடுதி வார்டன் மகேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்