பச்சை மிளகாய் சாகுபடி

பச்சை மிளகாய் சாகுபடி

Update: 2023-09-10 11:11 GMT

அருள்புரம்

அன்றாட உணவில் அதிக அளவில் பயன்படுத்தக்கூடியது பச்சை மிளகாய். சைவம் மற்றும் அசைவ என்ற இரண்டுக்கும் அதிக அளவில் பயன்படுத்தக்கூடியது.இந்த பச்சை மிளகாயில் விலையில் காரம் இல்லை என வேதனை தெரிவித்துள்ளார்கள். இது குறித்து பச்சை மிளகாய் பயிரிட்டுள்ள கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட காளிநாதம்பாளையத்தை சேர்ந்த விவசாயி தியாகராஜன் (40) கூறியதாவது: 1 ஏக்கரில் பச்சை மிளகாய் பயிரிட்டுள்ளோன். 1ஏக்கருக்கு 6000 நாற்றுகள் 1 நாற்று 1 ரூபாய். 1ஏக்கருக்கே உழவு, நாற்று நடுதல், மருந்து, உரம், களை எடுத்தல்.ஆகியவற்றிற்கு ரூ 1லட்சம் செலவு ஆகிறது.நாற்று நட்டு 2 மாதங்கள் ஆகிறது. தற்பொழுது தான் காய் பிடிக்கிறது. 3 மாதத்திற்கு பறிக்கலாம். 1 மாதத்திற்கு 1 முறை என 3 மாதத்திற்கு 3 முறை பறிக்கலாம். 1 முறை பறித்தால் 1 ஏக்கருக்கு 9-10 டன் வரை கிடைக்கும். ஆனால் தற்பொழுது 6-7 டன் வரை மட்டுமே கிடைக்கிறது. தற்பொழுது 1 கிலோ ரூபாய் 20-30 வரை விற்கப்படுகிறது. ஆனால் 35-45 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். 3 முறை பறித்துவிட்டால் பச்சை மிளகாய் செடியின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது. மேலும் இலைகள் உதிர்ந்து விடுகிறது. பேன் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. இதற்கு எந்த மருந்து அடித்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் தற்பொழுது வரும் நாற்றுகள் ஹைபிரிட் வகையைச் சேர்ந்தது. இது 3 மூன்று மாதத்திற்கு மட்டுமே வளரும். இதற்கு முன்பு நாட்டு ரக நாற்றுகள் இருந்தன. இது 6 மாதம் முதல் 1 வருடம் வரை வளரும். தற்பொழுது நாட்டு ரகம் அழிந்துவிட்டது. வேளாண்மைத்துறை அதிகாரிகள் யாரும் வருவதில்லை. இப்படி சென்றால் விவசாயம் விரைவில் அழிந்துவிடும். வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்