பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடந்தது
பிடாரி காளியம்மன் கோவிலில் மிளகாய் யாகம் நடந்தது
வாணாபுரம் அருகே வரகூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிடாரி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று மிளகாய் யாகம் நடைபெற்று வருகிறது.
அதன்படி அமாவாசையையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் இரவு 11 மணியளவில் மிளகாய் யாகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதனையொட்டி கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.