கோவிலில் மிளகாய் சண்டி யாகம்

கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடந்தது.;

Update: 2022-10-25 18:03 GMT

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் மூட்டை, மூட்டையாக மிளகாய் வத்தல் போடப்பட்டது. மேலும் முக்கனிகள், சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் யாக குண்டத்தில் போடப்பட்டன. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்