குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில்நடந்த குழந்தைகள் தின விழாவுக்கு பள்ளி கல்விக்குழும தலைவர் மோகனகிருஷ்ணன் மற்றும் செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி பேசினர். பள்ளி முதல்வர் வனிதா, துணை முதல்வர் கிப்ட்சன் கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பிரியங்கா இறைவணக்கம் பாடினார். ஆசிரியர்கள் நடனம், பாட்டு பாடுதல், கவிதை வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவுத்திருவிழாவில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக உணவு அருந்தினர். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர் முகைதீன் பாத்திமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.