சர்வதேச குழந்தைகள் தினம்

கீழஈராலில் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது;

Update: 2022-06-01 17:09 GMT

எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள கீழஈரால் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூத்துக்குடி சைல்டுலைன் சார்பில் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பச்சைபாண்டியன் தலைமை தாங்கினார். சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் காசிராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் அழகு சுந்தரம், குழந்தைகள் நலக்குழு செயல்பாடுகள் குறித்து பேசினார். சிடார் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் பரதன், சைல்டு லைன் பணியாளர்கள், சிடார் தொண்டு நிறுவன பணியாளர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். சைல்டு லைன் பணியாளர் ராமலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்