ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்

ஆனந்த குளியல் போடும் சிறுவர்கள்;

Update: 2023-04-04 17:25 GMT

வாணாபுரம்

சாத்தனூர் அணியில் இருந்து கடந்த மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது இடதுபுற கால்வாய் வழியாக 40 ஏரிகளுக்கு செல்கிறது.

அதன்படி தற்போது கால்வாயில் இருபுறமும் நிறைந்தவாறு தண்ணீர் செல்வதால் இதில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கால்வாய் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

வாணாபுரம் யுபிரிஜ் என்னும் இடத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சிறுவர்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் வந்து சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை குளித்து செல்கின்றனர்.

மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் நீண்ட நேரம் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்