சாலை விபத்தில் 2 சிறுவர்கள் காயம்

சாலை விபத்தில் 2 சிறுவர்கள் காயம் அடைந்தனர்.;

Update: 2023-01-12 18:45 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் தேவாங்கர் நகரை சேர்ந்த லீரோஸ் மகன் வீரப்பாண்டி (வயது 17). இவர் தனது மோட்டார்சைக்கிளில், தனது நண்பர் சக்திவேல் (17) என்பவருடன் விஸ்வநத்தம்-சிவகாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். முன்னே சென்ற வாகனத்தை அவர்கள் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது நிலைதடுமாறி இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த சக்திவேலை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து சக்திவேல் தாய் லதா சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்